வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் : ஜோ பைடன் உத்தரவு

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற உடன் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துவருகிறார். குறிப்பாக கொரோனா வைரசை கட்டுப்படுத்த அவர் அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்துவருகிறார். அமெரிக்காவில் அனைவரும் 100 நாட்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு வரும் முன்னர் விமான நிலையத்திலேயே கொரோனா இல்லை என்ற சான்றிதழை பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்து பயணிகளும் மத்திய நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளை பின்பற்றி சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள் எத்தனை நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற தகவலை பைடன் தெரிவிக்கவில்லை.

ஆனால், மத்திய நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. எத்தனை நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற முழுமையான விவரம் தற்போதுவரை வெளியாகவில்லை. இந்த சுய தனிமைப்படுத்தல் நடைமுறை ஜனவரி 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply