கங்கையில் பானை வீசி காளி பாணி பருகிய பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பவித்ரா வன்னியாராச்சிக்கு செய்யப்பட்ட ரெபிட் என்டிஜன் சோதனையில் தொற்று இருப்பது இனங்காணப்பட்டுள்ள நிலையில் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் அதுவரை பவித்ரா வன்னியாராச்சி தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்கத்தின் ஆதரவு இணையம் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வௌியாகவில்லை.

இலங்கையில் கொரோனா ஒழிக்கவென புனித நீர் அடங்கிய பானையை கங்கையில் போட்டதுடன் கொரோனா ஒழிப்பு சர்ச்சைக்குரிய காளி பாணியையும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பருகியமையும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply