தீர்வு வழங்காவிட்டால் நாடுமுழுவதும் பேருந்து வேலைநிறுத்தம் : கெமுனு

கொரோனா பரவலினால் நாட்டின் பேருந்து தொழில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், தனியார் பேருந்துகள் நாடுமுழுவதும் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மார்ச் மாதம் 08ம் திகதி நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் நாடுமுழுவதும் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (24) ஒன்றிணைந்த பஸ் உரிமையாளர்கள் சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply