உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக அமெரிக்க மாடர்னா நிறுவனம் தயாரிக்கும் வீரியமிக்க தடுப்பூசி
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை பல்வேறு நாடுகள் தயாரித்துள்ளன. இந்த தடுப்பூசிகள் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தற்போது இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முன்பு பரவிய வைரசை விட உருமாறிய கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியது என்றும், அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக செயல் திறனுடன் பலன் அளிக்குமா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக பலன் அளிப்பதாக முதல்கட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசி உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் செயல்திறனுடன் போராடுகிறது. என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் பரவிவரும் உருமாறிய கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
இங்கிலாந்தில் பரவும் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செயல்பாட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்காமல் செயல்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்தது.
ஆனால் தடுப்பூசியின் 2-வது டோசின் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாதுகாக்கும் என்று நம்புகிறோம். இதனால் தென்ஆப்பிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக தற்போதுள்ள தடுப்பூசியை மேலும் வீரியம் மிக்கதாக உருவாக்க பரிசோதனைகள் செய்யப்படும்.
இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply