கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணத்தை பொது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் : ஹரித அலுத்கே

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப் பதற்கான காரணத்தை பொது சுகாதார அதிகாரிகள் பொது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

கொழும்பு மாநகர எல்லைக்குள் காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது கொழும்பு மாவட்டம் முழுவதும் பரவி காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 24 ஆம் திகதி அன்று வெளியான கொரோனா அறிக்கையை ஆய்வு செய்யும் போது இந்த நிலைமை தெளிவாகிறது என வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் அசாதாரண எண்ணிக்கை யிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியதற்கான காரணத்தை சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என வைத்தியர் ஹரித அலுத்கே வலியுறுத்தினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply