அரசு தடை எதிரொலி : ‘டிக்டாக்’ நிறுவனம் இந்திய பிரிவை மூடியது
பாதுகாப்பு காரணங்களைக் கூறி, சீனாவின் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தடைவிதித்தது.இந்நிலையில், டிக்டாக், ஹலோ செயலிகளை உருவாக்கிய சீன சமூக ஊடக நிறுவனமான பைட்டான்ஸ், அதன் இந்திய தொழில் பிரிவை மூடுவதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தொடர் கட்டுப்பாடுகள்தான் இந்த முடிவுக்குக் காரணம் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக டிக்டாக்கின் உலக இடைக்காலத் தலைவர் வனேஸா பாப்பாஸ், துணைத் தலைவர் பிளேக் சாண்ட்லீ ஆகியோர் கூட்டாக தமது ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளனர். அதில், இந்திய பிரிவை மூடுவதை ஒட்டி இந்தியாவில் உள்ள 2 ஆயிரம் ஊழியர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்களை குறைப்பதாகவும், அது இங்குள்ள தமது அனைத்து ஊழியர்களையும் பாதிக்கும் என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு சட்டங்கள், விதிகளுக்கு உள்பட்டு தங்கள் நிறுவனம் நடந்தபோதும், அரசின் கட்டுப்பாடு தொடரும் நிலையில் தமது இந்தியப் பிரிவை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. தற்போது நிலையற்ற தன்மை நிலவினாலும், எதிர்காலத்தில் இந்தியாவில் தங்கள் தொழிலை மீண்டும் தொடர்வோம் என்ற நம்பிக்கை இருப்பதாக அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply