33 வருடங்களுக்கு பின் யாழ்.மாநகர சபைக்கு எமது கட்சியின் சார்பில் மேயர் நியமிக்கப்படுவார்: சுசில் பிரேமஜயந்த

யாழ்., வவுனியா மக்களின் இயல்பு நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதுடன் மாணவர்களின் கல்விசெயற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் யாழ்ப்பாணம் தொண்டராசிரியர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும் கல்வியமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

யாழ். மாநகர சபைக்கு 33 வருடங்களின் பின் எமது கட்சியின் சார்பில் புதிய மேயர் நியமிக்கப்படுவார். என்றும் அவர் சொன்னார். “நாட்டை வெற்றிக்கொண்டு கிராமத்தை பாதுகாப்போம்”எனும் தொனிப்பொருளில் மஹாவலி மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் நடவடிக்கை தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

யாழ் மாநகர சபை, வவுனியா நகர சபை ஆகிய இரண்டில் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் போட்டியிடுகின்றது. வவுனியாவை பொறுத்தமட்டில் சிங்கள,தமிழ், முஸ்லிம் மக்கள் அன்னியோன்யமாக வாழ்ந்வதை காணமுடிந்தது. யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் அம்மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றிவர்களுக்கான நேர்முக பரீட்சைகள் நிறைவடைந்து விட்டன. தேர்தலுக்கு பின்னர் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும். வடக்கை பொறுத்தமட்டில் கல்வி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட்டு வருக்கின்றன. யாழ் மாநகர சபையை பொறுத்தமட்டில் 33 வருடங்களுக்கு பின்னர் எமது கட்சியில் மாநகர மேயர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply