பொலிஸாருக்கான கொவிட் தடுப்பூசி
பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி நாளை (31) முதல் வழங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.பொலிஸ் வைத்தியசாலையில் காலை 09.00 மணிக்கு குறித்த தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் சுகாதார ஊழியர்களிடம் இருந்து இந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும்.
அதேபோல் கண்டி குண்டசாலை பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் வைத்தியசாலையின் உள்ள ஊழியர்களுக்கு தடுப்பூசி எதிர்வரும் 02ம் திகதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply