கொவிட் தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்கவிளைவு

கொரோனா நோய்த்தடுப்பு தடுப்பூசியை பெற்றுக்கொண்ட குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சுகாதார ஊழியர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக வேதியியல் நிபுணர்களின் சங்கம் கூறுகிறது. சாதாரண தடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவுகளை விட அதிகமான பக்கவிளைவுகள் இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் சுகாதார ஊழியர்கள் சில சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும், தடுப்பூசி வழங்குவதற்கு முன்பு அது தொடர்பான பரிசோதனையுடனான விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தகைய விசாரணைகளை மேற்கொள்ளமை குறித்து சுகாதார அமைச்சிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கமான தடுப்பூசிகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர வேறு எந்த குறிப்பிடத்தக்க அளவிலான ஆபத்தும் எழவில்லை என கொவிட் நோய் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹர்ஷத சில்வா குறிப்பிட்டுள்ளார். இது ஒரு சாதாரண நிலைமை என்றும் அதற்கு யாரும் அச்சமைடைய தேவையில்லை என்றும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply