அமேசான் சிஇஓ பதவியில் இருந்து விலகுகிறார் ஜெப் பெசோஸ்

அமேசான் நிறுவனத்தின் சிஇஓவாக பதவி வகித்து வருபவர் ஜெப் பெசோஸ். இவர் கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார்.

இதற்கிடையே, கடந்த மாதம் டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலன் மாஸ்க் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

இந்நிலையில், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவார் என அமேசான்.காம் இன்க் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அவர் தொடர்ந்து நிர்வாகத் தலைவர் பொறுப்பில் செயல்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்தில் இணைய தள பொறுப்புகளை நிர்வகித்து வரும் ஆண்டி ஜெசி சிஇஓ பொறுப்பில் செயல்படுவார் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply