பதவிக்காலம் நிறைவடைந்த வியட்நாம் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து வெளியேறும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஃபெம் தி பிக் என்கொக் (H. E. Mrs. Pham Thi Bich Ngoc) அவர்கள், ஆலோசனை மற்றும் தூதுவர் காரியாலயத்தின் பிரதி தலைவர் ட்ரான் ட்ரொங் தன் (Mr. Tran Trong Thanh) அவர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (2021.02.02) முற்பகல் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது தனது பதவிக்காலத்தின் போது இலங்கை அரசாங்கத்தினால் தனக்கு கிடைத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். தனது காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவு நீடித்த சில துறைகள் குறித்தும் அவர் கௌரவ பிரதமருக்கு தெளிவூட்டினார்.

இரு நாட்டிற்கும் இடையே காணப்படும் சமயம் சார்ந்த உறவு மற்றும் வர்த்தக உறவு என்பவற்றை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயத்துறை மற்றும் மீன்பிடித்துறை ஆகிய இரு துறைகளிலும் இரு நாட்டினதும் அறிவு மற்றும் செயற்பாடுகளை பகிர்ந்துக் கொள்வது தொடர்பில் கௌரவ பிரதமரும் தூதுவரும் இதன்போது கலந்துரையாடினர்.

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே கல்வியை மேம்படுத்துவதற்கு மாணவர் பரிமாற்ற வேலைத்திட்டமொன்று செயற்பாட்டிலுள்ளது. அதனை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கௌரவ பிரதமர் ஜனாதிபதியாக சேவையாற்றிய காலத்தில் 2009 வியட்நாமிற்கு விஜயம் செய்தமையை நினைவூட்டிய தூதுவர், மீண்டும் வியட்நாமிற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

தமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி பல வருடங்களாக இலங்கையில் தனக்கு கிடைத்துள்ள ஆதரவு தனக்கு பதிலாக இங்கு சேவையாற்ற வருபவருக்கு கிடைக்கும் என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறும் எனவும் குறித்த கலந்துரையாடல் குறித்து கௌரவ பிரதமருக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய தூதுவர் குறிப்பிட்டார்.

பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து வெளியேறும் வியட்நாம் தூதுவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த கௌரவ பிரதமர், வியட்நாம் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் நட்பிற்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் கலந்து கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply