மூன்று மாதங்களில் நாட்டில் இருந்து கொரோனா ஒழிக்கப்படும் : இராஜாங்க அமைச்சர்

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நாட்டை கொரோனா தொற்றிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 

180 லட்சம் கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் 15 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

உலக சுகாதார நிறுவனத்தில் தடுப்பூசி மற்றும் ரஸ்ய தயாரிப்பு தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சீனாவின் அன்பளிப்பில் கிடைக்கும் 2 லட்சம் தடுப்பூசி விரைவில் நாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்தார். 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply