மீன்பிடிக்கும் படகுகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம்

நீண்ட நாள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் படகுகள் தொடர்பான சட்டங்கள் திருத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் துறையை மீளமைக்கவென கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும். பல்வேறு காரணங்களினால் செயலிழந்த மீனவ சங்கங்களை ஒரே அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் கடலுக்குச்சென்று மீன்பிடிக்கும் படகுகளுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய குளிரூட்டி வசதிகளை வழங்குவது அவசியமாகும்.

மேலும் 4,200 படகுகளுக்கு VMS கருவியும் பொருத்தப்படவிருக்கிறது. இதன் மூலம் கடல் எல்லைகளை உரிய முறையில் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும். தரமற்ற படகுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply