இன்றும், நாளையும் விசேட சோதனை நடவடிக்கைகள்

இன்றும், நாளையும் மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வார இறுதி தினத்தை முன்னிட்டு மேல் மாகாணத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லும் நபர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான அன்ரிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் மேல்மாகாணத்திலுள்ள பொது சந்தைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளில் எழுமாறான அன்ரிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 02 ஆயிரத்து 997 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply