ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும்
கடந்த அரசாங்கத்தை போன்று அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த அரசாங்கம் வழக்கு தாக்கல் செய்யாது என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதால் அதனை அமைச்சரவையில் கலந்துரையாடி சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதன்பின் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டின் நீதியை வலைக்கவோ சட்டத்தில் தலையீடு செய்யவோ நீதியின் இறைமைக்கு இடையூறு ஏற்படுத்தவோ மாட்டார்கள் என அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply