இலங்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டு வரும் நிலையில் இம்ரான் கானின் இந்த விஜயம் குறித்து சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் அவதானம் செலுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் என்பது சீனாவின் தலையீடுகளை அதிகம் கொண்ட நாடு என்பதால் சீனாவின் தேவைக்காக பிரதமர் இம்ரான் கான் இலங்கை வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் தற்போது சிறு தளம்பல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் எதிரி நாடு எனக் கூறப்படும் பாகிஸ்தானின் பிரதமர் இலங்கை வருகின்றமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் இந்தியாவை மேலும் கோபமடையச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பாகிஸ்தான் பிரதமருடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply