தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்க சம்பள நிர்ணய சபை அங்கீகாரம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 900 ரூபாவும் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்க சம்பள நிர்ணய சபை ஒப்புதல் அளித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் கூறினார்.

சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.தொழில் அமைச்சின் ஆணையாளர், வர்த்தக சங்கங்கள் மற்றும் தோட்ட உரிமையாளர்கள் இடையே இன்று நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின் போதே இம்முடிவு எட்டப்பட்டதாக ராமேஸ்வரன் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply