ஜனாதிபதி, பிரதமரை விமர்சித்த விமல் வீரவன்சவிற்கு எதிராக ஆளும் கட்சியில் போர்கொடி
ஆளும் பொதுஜன பெரமுன கட்சிக்குள் காணப்படும் அதிகாரப் போட்டி மற்றும் வெவ்வேறு அணி பிரச்சினை தற்போது வௌிச்சத்திற்கு வந்துள்ளது. அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக பொதுஜன பெரமுன கட்சியில் உள்ளவர்கள் போர்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர்.
லங்கா தீப பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய அமைச்சர் விமல் வீரவன்ச, மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுன கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என விமல் வீரவன்ச அதில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டின் ஜனாதிபதி அனுபவம் குறைந்தவர் எனவும் அவர் கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் வகையில் அவர் கருத்து வௌியிட்டுள்ளார்.
இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து தொடர்பில் அவர் மன்னிப்பு கோர வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பி தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பொதுஜன பெரமுன தொடர்பாக எவ்விதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளும் உரிமை விமல் வீரவங்சவிற்கு இல்லை என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவருடைய அறிவிப்பு குறித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுடன் அந்த கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.
மேலும் கூட்டணியில் இணைந்துகொண்ட ஒருவர் மிக கீழ்த்தரமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறித்து கட்சி என்ற வகையில் கவலையடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோராவிட்டால் உடனடியாக பதவி விலக வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
அத்துடன் விமல் வீரவன்சவின் செல்வாக்கு குறைந்துள்ளதால் சரத் வீரசேகரவை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வைத்ததாகவும் விமல் வீரவன்சவின் பின்னால் வௌிநாட்டு முகவர் சேவையில் சம்பளம் பெறும் இரண்டு வைத்தியர்கள் இருப்பதாகவும் பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply