வவுனியாவில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

வவுனியா கற்குழிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.நேற்று வீட்டில் தனது தங்கையுடன் தனித்திருந்த சிறுமி, இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். குறித்த மாணவி தூக்கில் தொங்கியிருப்பதை அவதானித்த அவரது தங்கை அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கற்குழி பகுதியைச் சேர்ந்த சதுசியா (16) என்ற மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

அவர் எழுதியதாகத் தெரிவிக்கப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply