எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் அரசாங்கம் மக்களை அசௌகரியத்துக்கு உட்படுத்தியுள்ளது: ஐ.தே.க
எரிபொருட்களின் விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று ஐக்கிய தேசிய கட்சி இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அரசாங்கத்தின் ஊழல் மற்றும் அதிகரித்த அமைச்சர்களின் செலவுகளை சமாளிப்பதற்காக எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப் பட்டுள்ளன. கடந்த காலத்தில் யுத்தத்துக்காக மக்கள் பல அர்ப்பணிப்புக்களை செய்தனர்.
அவ்வாறு அர்ப்பணிப்புக்களை செய்துள்ள மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் பரிசே எரிபொருள் விலை அதிகரிப்பாகும். உலக சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை கடந்த காலத்தில் 130 டொலர்களாக இருக்கும்போதே தற்போதைய விலைகள் தீர்மானிக்கப்பட்டன. ஆனால் உலக சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் தற்போதைய விலையானது 70 டொலர்களாகும்.
நிலைமை அவ்வாறு இருப்பினும் விலை வீழ்ச்சியின் பயனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு மாறாக அரசாங்கம் மக்களை அசௌகரியத்துக்கு உட்படுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply