சர்வகட்சிக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொண்டது
நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி தலைமையில் இன்று காலை நடைபெற்ற சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டன. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இன்றைய முதலாவது கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தலைமையிலான குழுவொன்று கலந்துகொண்டது.
புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட முன்னர் இவர்கள் பேராசிரியர் தலைமையிரான சர்வ கட்சி கூட்டங்களிலோ ஜனாதிபதி அழைப்பு விடுத்த கூட்டங்களிலோ கலந்துகொள்ளவில்லை. வடக்கில் யுத்தத்தினால் சேதமுற்ற பிரதேசங்களை மறுசீரமைத்தல் மற்றும் இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீளக்குடியமர்த்தல் போன்ற விடயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற சகல கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒரே குரலில் வலியுறுத்தினர்.
எந்தக் கட்சிக்கும் இப்போது மரண அச்சுறுத்தல் இல்லாத காரணத்தினால் அனைவரும் மனம் திறந்து பேசி தமது உண்மையான நிலைப்பாட்டை முன்வைத்தனர் எனவும், ஜனாதிபதி முன்னெடுக்கும் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதிக்கு உறுதியளித்தன என்றும் அமைச்சர் அநுர பிரியதாஷன யாப்பா இக்கூட்டம் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply