தாய் நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்: கோத்தாபாய ராஜபக்ஷ

சுயநல மனப்பான்மையின்றி தாய் நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். நாட்டில் ஊடுருவியிருந்த பயங்கரவாதத்தை பாதுகாப்பு படையினர் தோற்கடித்ததன் மூலம் கிடைக்கப்பெற்ற வெற்றியை முன்கொண்டு செல்ல வேண்டுமாயின் அனைத்துத் தடைகளிலிருந்தும் சுதந்திரம் பெற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினரால் பெறப்பட்ட வெற்றியை உதாரணமாகக் கொண்டு நாட்டின் இளம் சமுதாயத்தினர் பொறுப்புடன் செயற்படுவார்களாயின் இந்தப் பணியை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் கூறினார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் கூறியதாவது:

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காகப் பாடுபட்டனர். இதன்போது அவர்கள் தமக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் குறித்தோ அல்லது தமது உயிர்கள் குறித்தோ கவலைப்படவில்லை.

பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களையும் தாய் நாட்டையும் மட்டுமே கருத்திற்கொண்டு இந்த போர் நடவடிக்கைகளின் ஈடுபட்டனர். எமது இராணுவத்தினரின் இவ்வாறான சேவை மனப்பான்மையைக் கருத்திற்கொண்டேனும் நாம் எந்தவொரு தொழிலில் ஈடுபட்டாலும் தாய் நாட்டுக்காக முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனும் மனப்பான்மையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்படுவதன் மூலம் ஒரு ஆத்ம திருப்தியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply