பிரேசிலை உலுக்கும் கொரோனா : 4வது முறையாக சுகாதாரத்துறை மந்திரி மாற்றம்

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது.

அதிபர் ஜெயிர் போல்சனரோ தலைமையிலான அரசு கொரோனா வைரசை முறையாக கையாளவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

ஜெயிர் போல்சனரோ அதிபராக பதவி ஏற்றது முதல் சுகாதார மந்திரியாக இருந்து வந்த லூயிஸ்ஹென்ரின் மாண்டெட்டா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக நெல்சன் டீச் புதிய சுகாதார மந்திரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் இவரும் சில வாரங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ராணுவ ஜெனரல் எட்வர்டோ பசுவெல்லோ இடைக்கால சுகாதார மந்திரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த பதவிக்கு அவர் நிரந்தரமாக நியமிக்கப்பட்டார்.

மருத்துவத் துறையில் எந்த வித அனுபவம் இல்லாத ராணுவ ஜெனரலை சுகாதார மந்திரியாக நியமித்ததற்கு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், பிரேசிலில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து 4-வது முறையாக சுகாதாரத் துறை மந்திரி மாற்றப்பட்டுள்ளார்.

பிரேசில் சுகாதாரத் துறைக்கு புதிய மந்திரியை நியமித்துள்ளதாக அதிபர் ஜெயீர் போல்சனரோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், எட்வர்டோ பசுவெல்லோ சுகாதாரத் துறை மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு, டாக்டரும் இருதயவியல் சங்கத்தின் தலைவருமான மார்செலோ குயிரோகா புதிய சுகாதாரத் துறை மந்திரியாக நியமிக்கப்படுகிறார் என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply