ஐக்கியநாடுகள் மனித உரிமையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் ஏமாற்றமளிக்கின்றது : சிபோன் மக்டொனாக்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் காணப்படுகின்றது என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனாக் -தெரிவித்துள்ளார்.Siobhain McDonagh, MP for Mitcham and Morden
பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விவாதத்தின் மீது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் குறைவானதாக காணப்படுகின்றது it disappointingly falls short’. என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுப்பதன் மூலம் குற்றவியல் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகள் எவையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.பிரிட்டிஸ் அரசாங்கம் பாதுகாப்பு சபையில் போதிய ஆதரவு கிடைக்காது என தெரிவித்ததை என்னால் நம்பவே முடியவில்லைஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply