நாட்டைப் பிளவுபடுத்தி இலாபமடைய ஏகாதிபத்தியவாதிகள் முயற்சி
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மொனராகலை வெல்லஸ்ஸ பிரதேசத்தில் வாழ்ந்த சிங்கள, முஸ்லிம்கள் மத்தியில் பிரிவை ஏற்படுத்தி அதன் மூலம் இலாபமடைய அன்று ஏகாதிபத்தியவாதிகள் முயன்றனர். அது போலவே இன்றும் எமது நாட்டையும் மக்களையும் பிளவுபடுத்தி அதன் மூலம் பயனடைய ஏகாதிபத்திய வாதிகள் முயற்சி செய்தனர்.
ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதற்கும் அஞ்சாது, தலைகுனியாது, நிமிர்ந்து நின்று பயங்கரவாதத்தை ஒழித்து சுதந்திர இலங்கையை எமக்குப் பெற்றுக் கொடுத்தார். இன்று இந்நாட்டு மக்கள் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக நடமாடும் அதிஷ்டத்தைப் பெற்றுள்ளனர்.
இவ்வாறு துறைமுகங்கள், விமான சேவைகள் நீர் முகாமைத்துவ அமைச்சர் திரு. சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். அண்மையில் மொனராகலை பகினிகஹவெலை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்த அமைச்சர் முஸ்லிம் மக்களைச் சந்தித்து கலந்துரையாடும் போது குறிப்பிட்டார். இக் கூட்டத்தில், முன்னாள் ஊவா மாகாண சபை அமைச்சர் தயாரத்தின பண்டார உட்பட மற்றும் பலர் உரையாற்றினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply