மன்னார் முச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸ் இலச்சினை பதிப்பு
மன்னாரில் சேவையிலீடுபட்டு வரும் நூற்றுக்கணக்கான முச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸ் இலட்சினை பொறிக்கும் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனால் பல ஆட்டோக்கள் பொலிஸ் நிலையம் முன்பாகக் காத்துக்கிடக்கின்றன.
மன்னாரில் கடந்த காலங்களில் வாடகைச் சேவைகளில் ஈடுபட்டு வந்த முச்சக்கர வண்டிகளில் பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாகவும் பயனாளிகள் பல்வேறு வழிகளில் ஏமாற்றப்பட்டு வந்ததாகவும் மன்னார் பொலிஸுக்கு முறைப்பாடுகள் கிடைத்தன. வன்னி யுத்தத்தில் ஆட்டோக்களின் பங்களிப்பும் அதிகமிருந்ததாக மன்னார் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தற்போது இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆட்டோவின் பின் புறம் பொறிக்கப்பட்டுள்ள இலட்சினையினால் மன்னார் போகினர். மற்றும் ஆட்டோ சாரதிகளின் தொலைபேசி விபரங்கள் உட்பட சகல விபரங்களும் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டம் மிகச் சிறந்ததொரு திட்டம் என்று பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply