மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்காது முடக்கும் எவ்வித திட்டமும் அரசாங்கத்திற்கு இல்லை

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டா என ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப் போவதில்லை என இந்திய அரசியல் தலைவர்களிடம், இலங்கை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தெளிவுபடுத்தியுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.

எனினும், 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் கூறப்பட்டுள்ள காவல்துறை அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்காது முடக்கும் எவ்வித திட்டமும் அரசாங்கத்திற்கு இல்லை என பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply