நேற்றைய மோதல்களில் மட்டும் 250க்கு மேற்பட்ட படையினர் பலி ஐ.தே.கட்சி :தயாசிறி ஜயசேகர

முகமாலை,கிளாலி பிரதேசங்களில் பாதுகாப்பு படையினருக்கும் புலிகளுக்குமிடையே நேற்று இடம்பெற்ற மோதலில்களில் மட்டும் 250 படை வீரர்கள் கொல்லப்பட்டரென குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மோதலின் போது காயமடைந்த படையினர் அநுராதபுரம், கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆஸ்பத்திரிகளில் இவர்களுக்கு இடம் வழங்கும் வகையில் அங்கு ஏலவே தங்கிச் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரெனவும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், வடபகுதியில் இடம்பெறும் யுத்தம் காரணமாக கொல்லப்பட்ட 48 படை வீரர்களின் சடலங்கள் ஒரு வாரத்தின் பின்னர் குருநாகல் மாவட்டத்திலுள்ள அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட எத்தனையோ படை வீரர்களின் சடலங்கள் இன்னும் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படாமலுள்ளன. இவைகள் குறித்துப் பேசுவதற்கு இன்று யாருமில்லை.
அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இறுதியாக நடைபெற்றபோது பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க வட பகுதி மோதல்களின் போது உயிரிழந்த, காயமடைந்த படையினர் தொடர்பான விபரங்களை ஏன் வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply