வவுனியா இரட்டைக்கொலை கல்விச் சமூகத்தினர் அதிர்ச்சி

வவுனியாவில் சனிக்கிழமை இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக வவுனியா பதில் நீதிவான் எம். சிற்றம்பலம் விசாரணைகளை நடத்தினார். மரணவிசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் இருவரின் சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரும் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்துக்கு அப்பால் 2 கிலோ மீற்றர் தூரத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

இதேவேளை, யுத்த சூழல் முடிவுற்று அமைதி ஏற்பட்டு வவுனியா நகர சபைத் தேர்தலை நடத்த அரசு ஏற்பாடுகளை செய்துவரும் போது வவுனியாவில் சனிக்கிழமை பட்டப்பகலில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கல்விச்சமூகம் கவலை தெரிவித்துள்ளது.

வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேம்லால் திஸாநாயக்க இக்கொலை தொடர்பாக அரசாங்கம் கவலை தெரிவிப்பதாகக் கூறினார்.

அத்துடன், இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் கொலையாளிகள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply