இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் காலமானார்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். 99 வயதான இவர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.வின்ஸ்டர் அரண்மனையில் உயிர் பிரிந்ததாக எலிசபெத் ராணி தெரிவித்துள்ளார். மறைந்த இளவரசர் பிலிப், 1921-ம் ஆண்டு கிரேக்க நாட்டில் பிறந்தார். 1947-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார்.

சுமார் 65 வருடங்கள் ராணிக்கு உதவியாக இருந்த பிலிப், கடந்த 2017-ம் ஆண்டு தன்னை பொது வாழ்க்கையில் இருந்து விடுவித்துக்கொண்டார். இவர் துடிப்பாக இருந்த காலத்தில் ராணியின் ஆட்சிக்கு மிகவும் உதவியாக இருந்தார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நீண்ட வருடங்கள் இளவரசராக இருந்தவர்.

பிலிப், கடந்த பிப்ரவரி 6-ந்தேதி மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே இருந்த இருதய நோய் மற்றும் நோய்தொற்றுக்காக சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply