இலங்கையில் ஐ.எஸ், அல்கொய்தா உள்பட 11 இயக்கங்களுக்கு தடை
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் 270 பேர் பலியானார்கள். இதுபற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு, நாட்டில் பயங்கரவாதத்தை தூண்டி வரும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களை தடை செய்யுமாறு சிபாரிசு செய்தது.
அதன்படி, ஐ.எஸ்., அல்கொய்தா, இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் உள்பட 11 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பான அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் உத்தரவு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தடை செய்யப்பட்ட இயக்கங்களில் உறுப்பினராக இருப்பது, அந்த உறுப்பினர்களுக்கு அடைக்கலம் அளிப்பது, நன்கொடை அளிப்பது உள்ளிட்ட எல்லா தொடர்புகளுக்கும் தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்களுக்கு 10 முதல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply