துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து : 41 பேர் பலி

உள்நாட்டு போர், பயங்கரவாதம், வறுமை உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த மக்கள் அகதிகளாக கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக நுழைந்து புகலிடம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயணத்தின் போது அகதிகள் செல்லும் படகுகள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்நிலையில், வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் எஸ்பக்ஸ் நகரில் இருந்து ஐரோப்பிய நாடான இத்தாலியின் லம்பிடுசா தீவுகளுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் 40-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் பயணத்தை தொடங்கினர். அவர்கள், சட்டவிரோதமாக மத்திய தரைக்கடலை கடக்கும் மிகவும் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.

ஆனால், அகதிகள் பயணித்த படகு மத்திய தரைக்கடலை நேற்று கடக்கும் போது திடீரென அலையில் சிக்கி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தால் படகு கடலில் மூழ்கியது. அந்த பயணித்த படகில் இருந்தவர்கள் அனைவரும் கடலில் மூழ்கினர்.

விபத்து குறித்து தகவலறிந்த துனிசியா கடற்படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால், கடற்படையினர் வருவதற்குள் படகில் இருந்த அகதிகள் 41 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 21 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியோரின் உடல்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டதால் அவற்றை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply