புத்தாண்டு காலத்தில் பொது மக்களின் நடத்தை மிகவும் வருந்ததக்க செயலாக அமைந்துள்ளது : சுதத் சமரவீர
புத்தாண்டு காலத்தில் பொது மக்களின் நடத்தை மிகவும் வருந்தத்தக்கச் செயலாக அமைந்துள்ளதாகத் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். தற்போது, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டிகளைப் பின்பற்றாமல் பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்றனர்.
இதன் விளைவுகளை எதிர்காலத்தில் நிச்சயமாகச் சந்திக்க நேரிடும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.அத்தோடு, இந்த நிலைமை தொடர்ந்தால், சுகாதார விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அடுத்த வாரம் கொரோனா நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் இரண்டாவது தடுப்பூசி வழங்குவது தொடர்பான இறுதி தீர்மானம் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித் துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply