இடம்பெயர்ந்துள்ள மக்களை விரைவில் மீளக்குடியமர்த்துவதே அரசின் முதல்பணி: ஜனாதிபதி

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று இலட்சம் மக்களையும் விரைவில் மீளக் குடியமர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்தியாவின் தேசியப் பத்திரிகையான ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஒரு மாதகாலம் கடந்துள்ள நிலையில் நாட்டின் அனைத்துப் பிரச்சினகைளுக்கும் தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி இடம்பெயர்ந்த மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் பெருந்தொகை நிதியை ஒதுக்கியுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர், இவற்றின் பிரதிபலன்களை விரைவில் காண முடியுமெனவும் தெரிவித்துள்ளார். ‘த ஹிந்து’ பத்திரிகையின் ஆசிரியர் என். ராமிடம் இவற்றைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி தொடர்ந்தும் இது பற்றிக் கூறுகையில்,

அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டின் எதிர்கால அரசியல் தீர்வுகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளது. இதற்காக அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விசேட மாநாடொன்றும் நடத்தப்படவுள்ளது. இதன் முதல் கூட்டத் தொடர் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இலங்கை மக்களின் சுபீட்சத்துக்காகவே இந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply