மசகு எண்ணையின் விலை 50 டாலர்களைத் தொட்டது

குறைந்துவரும் பெற்றோலியத்துக்கான சர்வதேச விலை ஒரு புதிய குறைந்த மட்டத்தை அடைந்துள்ளது. சிறிய மீட்சி ஒன்றை எட்டுவதற்கு முன்னதாக யூ. எஸ் மற்றும் பிரண்ட் மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 50 டாலர்கள் என்ற அளவுக்கு குறைந்தது.

4 மாதங்களுக்கு முன்னதாக அது பீப்பாய் ஒன்றுக்கு 147 டாலர்கள் என்ற அளவுக்கு இருந்தது.

உலக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ள நிலையில், அதில் எரிபொருளுக்கான தேவையும் மிகவும் மோசமாக குறைந்து, அதனால், எப்போதும் இல்லாத அளவுக்கு அந்தத்துறையில் நம்பிக்கையீனம் அதிகரித்திருப்பதையே இந்த வீழ்ச்சி காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply