இந்திய பயணத்தை போரிஸ் ஜான்சன் ரத்து செய்ய வேண்டும் : இங்கிலாந்து எதிர்க்கட்சி கோரிக்கை

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் இந்தியா வர இருந்தார். இருப்பினும் இங்கிலாந்தில் கொரோனா வைரசின் 2வது அலை வீசியதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் மாத இறுதியில் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவார் என அறிவிக்கப்பட்டது.

டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்யும் அவர், தொழிலதிபர்களுடன் கலந்துரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது.‌ அது மட்டுமின்றி இந்தியாவில் இரட்டை மரபணு மாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என இங்கிலாந்தின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.‌ இதுகுறித்து தொழிலாளர் கட்சியின் செயலாளர் ஸ்டீவ் ரீட் கூறுகையில் “அவர் இந்தியாவுக்கு பயணிப்பதை விட காணொலிக் காட்சி மூலமாக அதைச் செய்யலாம்” என கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply