ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டி நடத்துவதாக முடிவு எடுக்கவில்லை
ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி நடத்துவது குறித்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எதுவித முடிவும் எடுக்கவிலை. அடுத்து தென் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென்று மாத்திரமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானி த்துள்ளது என சுதந்திரக் கட்சிச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார். அரசியலமைப்பின் பிரகாரம் 2010 ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படவேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.
ஊவா மாகாண சபை மற்றும் யாழ், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங் கிய அமைச்சர் மேலும் கூறியதாவது, ஐ. ம. சு. முன்னணியோசுதந்திரக் கட்சியோ வேறு தேர்தல்களை நடத்துவது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. 2010ல் பொதுத் தேர்தல் நடைபெறுவது நிச்சயம் ஜனாதிபதித் தேர்தலை பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக நடத்துவது குறித்து எதுவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
அரசியல் யாப்பின்படி ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தென்மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். அதற்கே தயாராகி வருகிறோம். ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி பெரு வெற்றியீட்டும் என்பதில் எதுவித ஐயமும் கிடையாது. ஊவா உட்பட நாடுபூராவும் அரசாங்கம் பல பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. அரசாங்கம் குறித்து மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.
ஊவா மாகாணத்தில் ஐ. தே. க வின் சுவரொட்டிகளையோ பச்சை கொடி யையோ கூட காண்பதற்கில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஐ.தே. க வுக்கு ஆட்சி பீடமேற வாய்ப்பு இருப் பதாக தெரியவில்லை. அதனால் பல் வேறுபட்ட பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை மகிழ்விக்க ஐ.தே. க முயன்று வருகிறது. எதிர்க் கட்சிகளின் கருத்துக்கள் குறித்து மக்கள் தெளிவாக உள்ளனர்.
யுத்தத்தில் வெற்றியீட்டிய அரசாங்கம் பாரிய வன்செயல்களை தூண்டிவிடத் தயாராவதாக ஐ.தே. க குற்றஞ்சாட்டி வருகிறது. வன்செயல்களின் ஸ்தாபகர்கள் ஐ.தே.க.வே.
ஐ.தே. க. வுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவை மறைக்கவே அரசு வன் செயல்களை தூண்டி விடத் தயாராவதாக கூறிவருகிறது. வன்செயல்களுக்கு தலைமைத்துவம் வழங்கியவர்களுக்கு இன்று அதன் பலாபலன்கள் கிடைத்து வருகிறது.
அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்துக்கான சர்வகட்சிக் குழுக்கூட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், கடந்த காலங்களில் புலிகளை பலவீனப்படு த்தவும் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பல்வேறு சர்வகட்சிக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஆனால் நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் முதற் தட வையாகவே சர்வகட்சிக் குழுக் கூட்ட மொன்று நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சகல கட்சிகளும் பங்கேற்றதோடு அவற்றுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply