ஜனாதிபதி உறுதிமொழி; வைத்தியர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று (ஜீலை 7) செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஜனாதிபதியின் தலையீட்டையடுத்து கைவிடப்பட்டது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக வடக்குகிழக்கு உட்பட நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளின் பணிகள் நேற்று பெரிதும் பாதிக்கப்பட்டன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வெளிநோயாளர் சேவை, மருத்துவ ஆலோசனை சேவை, சத்திரசிகிச்சை சேவை என்பன தடைப்பட்டதால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளானார்கள்.

டாக்டர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக அறியாததால் பல நோயாளர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

உள்ளகப்பயிற்சிகளை முடித்துக்கொண்ட 970 டாக்டர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை இரத்துச்செய்ய வேண்டுமெனக்கோரியே இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது.

இப்போராட்டத்தை தொடர்ந்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கப்பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று முற்பகல் அலரிமாலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன்போது சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததால் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. இதையடுத்து, பிற்பகலின் பின்னர் நாட்டின் பல பகுதிகளிலும் டாக்டர்கள் கடமைக்குத் திரும்பினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply