கிழக்கு மாகாணசபைக்கு வரிகளை அறவிடுவதற்கு அதிகாரம் வழங்கும் நிதி நியதிச்சட்டம் நிறைவேற்றம்.

கிழக்கு மாகாணசபைக்கு அடுத்த ஆண்டிலிருந்து வரிகளை அறவிடுவதற்கு அதிகாரம் வழங்கும் நிதி நியதிச்சட்ட மூலம் , இரண்டாம் வாசிப்பின் போது இடம் பெற்ற பொது விவாதம் மற்றும் குழுநிலை விவாதம் ஆகியவற்றின் பின்னர் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆளும்கட்சி உறுப்பினர்கள் 17 பேர், சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்த்து எவரும் வாக்களிக்கவில்லை.

எதிர்க்கட்சித் தரப்பில் சமூகமளித்திருந்த உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்குபற்றாது இருந்தனர். விவாத முடிவில் தாங்கள் வாக்கெடுப்பில் பங்குபற்றப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் பசீர் சேகுதாவுத் சபையில் தெரிவித்தார்.

முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது முதலாவது வரவு – செலவுத் திட்டத்தைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றியதன் பின்னர் நிதி நியதிச்சட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான விவாதத்தை அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆரம்பித்துவைத்தார்.

“எமக்கென வருமானத்தைத் திரட்டுவதற்காகவும் அதன் மூலம் மாகாணசபையின் நிதி நிலையை ஸ்திரப்படுத்தவுமே நிதிநியதிச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டில் நிதி ஆணைக்குழுவின் சிபார்சின் மீது மத்திய திறைசேரி மூலம் நிதி கிடைப்பினும் 7 மீள்குடியேற்றம், வீதி அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு தனியான நிதி எமது மாகாணத்திற்கு தேவைப்படுகிறது. மாகாண நிதியிலிருந்தே இப்பணிகளை மேற்கொள்ள முடியும். அதற்கு தேவையான வருமானத்தை திரட்டி நிதி வளத்தை அதிகரிக்கவுமே நிதி நியதிச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மக்களுடைய தேவைகளை நிறைவு செய்யும் அமைப்பாக மாகாணசபையாக இருக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரமற்ற சபை ஒன்றை நிர்வகிக்க நாம் ஆயத்தமாக இல்லை என்பதில் உறுதியாக உள்ளோம் என்று அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply