உலகப் பொருளாதார நெருக்கடி இலங்கைக்குச் சாதகமானது
உலக அளவில் பாரிய பொருளாதார நெருக்கடி தோன்றியிருக்கின்றபோதிலும், அது இலங்கை போன்றதொரு வளர்முக நாட்டுக்குச் சாதகமாக அமையமுடியும் என பொருளியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். முன்னேறிய பொருளாதார நாடுகளில் இந்த நெருக்கடி தாக்கங்களை ஏற்படுத்தினாலும், இலங்கை போன்ற வளர்முக நாடுகளுக்கு முன்னேறிய நாடுகளின் தொழிற்துறைகள் இடமாற்றப்படுவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக ஹேக் சமூகக் கல்விகளுக்கான நிறுவனத்தைச் சேர்ந்த ஹவார்ட் நிக்கலஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தொழிற்துறைகளை ஈர்க்கக்கூடியதாக இலங்கை நீண்ட கால நோக்குடன் தொழிற்துறைகளுக்கான உறுதியான அடித்தளங்களை வழங்குமாயின் அது இலங்கைக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வளர்முக நாடுகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று நான் உண்மையாக நம்புகிறேன் என்று ஹவார்ட் இலங்கையில் நடைபெற்ற வர்த்தக நிகழ்வொன்றில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
இப்படியொரு சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்காது. இந்தியா போன்ற நாடுகள் அதிகளவு முதலீடுகளை ஈர்க்கும் என்பதால், வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து முதலீடுகள் வளர்முக நாடுகளை நோக்கி நகர அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன என்றார் ஹவார்ட்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply