மீள்குடியேற்றத்தின் பின்பே ஜனாதிபதித் தேர்தல்
இடம்பெயர்ந்திருக்கும் மக்களை மீள்குடியேற்று வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நோக்கமென அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். வடக்கில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு அவர்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடனேயே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் முதற்கட்டமாக, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு அரசாங்க உயர் அதிகாரிகள் அண்மையில் சென்றிருந்தனர். இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னுரிமையளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முல்லைத்தீவில் வீதித் திருத்தங்கள் போன்ற அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் கூறினார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply