பாதாள உலக கும்பலை ஒழிக்கும் நடவடிக்கையில் பொலிஸ், இராணுவம் நடவடிக்கை

பாதாள உலகக் கும்பலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் படையினர் ஆரம்பித்துள்ள நடவடி க்கைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தலையிட வேண்டாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசி யல்வாதிகளுக்கு அறிவுறுத் தியுள்ளார்.மக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் வகையில் பல் வேறு சட்டவிரோத செயற் பாடுகளில் ஈடுபடும் பாதாள உலகக் கும்பலை முற்றாக ஒழித்துக் கட்டுமாறு படை யினருக்கும் பொலிஸாருக் கும் பணிப்புரை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அதற்கு இடை யூறை ஏற்படுத்தும் வகையில் எந்தத் தலையீட்டை யும் மேற்கொள்ளக் கூடா தெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சரவையில் இது பற்றிக் கருத்துத் தெரிவித்து ள்ள ஜனாதிபதி, பாதாள உலகத்தினரையும், போதைப் பொருள் வியாபாரத்தை யும் ஒழித்துக் கட்டுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழ ங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பு நகரின் பல பிரதேசங்களில் பாதாள உல கக் கும்பல்கள் ஆறு இனங் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றின் தலைவர்களை யும் சகாக்களையும் தேடி விசேட பொலிஸ், இராணு வப் பிரிவினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகப்

பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தை பகுதியில் கொலை, கப்பம், கொள் ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இம்தியாஸ் கொல் லப்பட்டதன் பின்னர் பாதாள உலகக் கும்பல் மத்தியில் ஒருவித கொந்தளிப்பு நிலை தோன்றியுள்ளதாகத் தெரிவித் துள்ள பொலிஸ் வட்டாரங்கள், கொழும்பு, பொரளை, பேலியகொடை, தெமட்டகொடை, நுகேகொடை உள்ளி ட்ட பிரதேசங்களில் தமது பலத்தைக் காண்பித்து வந்த 20, 30, பாதாள உலகக் குழுவினர் இருப்பிடத்தைவிட்டு வெளியேறி தலைமறைவாகியிருப்பதாகவும், அவர்களைத் தேடி வலை விரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply