யாழ். மாநகர சபை தேர்தல் தீர்வை எட்டுவதற்கான வாசல்: அமைச்சர் டக்ளஸ்
யாழ். மாநகர சபைத் தேர்தலை நாம் சர்வ சாதாரணமாகக் கருதக் கூடாதெ ன்றும், எமது நாளாந்த மற்றும் அரசியல் பிரச்சினைகள் அனைத்துக்குமான தீர்வை எட்டுவதற்குரிய ஆரம்ப நுழை வாயிலாகவே இத் தேர்தலை கருத வேண்டும் என்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரு மான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வேலணை மற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலக ங்களில் வறிய குடும்பங்களை மேம்படுத்தும் சமூக சேவை கள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் திட்டத்தின் கீழ் உள்ளீடுகளை வழங்கும் வைபவங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா;
எமது மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றும் கொள்ளையடித்தும் நாடாளுமன்றம் சென்ற வர்கள் இதுவரையில் எமது மக்களின் நலன்சார்ந்து எவ்வித மான பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் வன்னியில் இருந்த எமது உறவுகள் பல்வேறு பாதிப்புக்களுக்கு உட்பட்ட போதும் அம்மக்கள் இடம்பெயர்ந்து வந்து நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையிலும் அம்மக்களது அவல ங்கள் குறித்தோ தேவைகள் குறித்தோ அக்கறை கொள் ளாமல் வெளிநாடுகளில் தங்களது குடும்பங்களை குடி யேற்றிவிட்டு நாடு நாடாக சுற்றித் திரிந்தவர்கள் இப் போது இங்கே தேர்தல் ஒன்று நடைபெறுகின்ற சந்த ர்ப்பத்தில் மீண்டும் வந்து மக்களை ஏமாற்றும் வித்தைக ளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
இன்னும் ஒருசிலர் வெறும் அறிக்கைகளை விட்டால் மட்டும் எமது மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என நினைத்து எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டு வரு வதை இங்கு உணர்த்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவான ந்தா, நாம் அன்று முதல் இன்றுவரை எமது மக்களின் தேவைகளை உணர்ந்து அம்மக்கள் மத்தியில் நிலைத்து நின்று செயற்பட்டு வருவதால் எமது மக்களின் உணர்வு களை நன்கு அறிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply