கிளிநொச்சி மாவட்டத்தில் 20,000 குடும்பங்களை மீள்குடியேற்ற ஏற்பாடு: அரசாங்க அதிபர் நா. வேதநாயகன்
வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் இருபதினாயிரம் (20,000) குடும்பங்களைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த முடியுமென கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் நேற்றுத் தெரிவித்தார். பூநகரி பிரதேச செயலகப் பிரிவின் தெற்கு பிரதேசங்களிலும், ஏ-9 நெடுஞ்சாலைக்கு மேற்கு பிரதேசங்களிலும் பளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்களை மீளகுடியமர்த்துவதற்குப் பாதுகாப்பு படையினர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக கிளிநொச்சி, மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் வவுனியா நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளார். பயங்கரவாத செயற்பாடு காரணமாக வன்னிப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை வடக்கின் வசந்தம் 180 நாள் திட்டத்தின் கீழ் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.
இந்தடிப்படையில் வன்னிப் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக மேம்படுத்து வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு ள்ளன. இவ்வாறான சூழ்நிலையில்,
கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், வீதி, உள்ளுராட்சி, கட்டடத் துறை ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் தொழில் நுட்பவியலாளர்கள், பொறியியலாளர்கள் அம்மாவட்டத்தின் வெவ்வேறு பிர தேசங்களுக்கும் நேற்று முன்தினம் சென்று திரும்பி யுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில், நாச் சிகுடா, வீரவில், ஜெயபுரம், வலைப்பாடு, அக்கராயன் குளம், வன்னேரிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்கே இக் குழுவினர் சென்று திரும்பியுள்ளனர்.
இம்மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் மக் களை வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மீளக்குடியமர்த்துவது தொடர்பாக விரிவாக கவனம் செலுத்தியதுடன் அப்பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வச திகளைத் துரிதமாக மேம்படுத்துவது குறித்தும் இக் குழுவினர் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.
பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க கட்டடங்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் பெரிதும் பாதிக்கப்படவில்லை. அவற்றை குறுகிய காலத்தில் புனரமைக்க முடியும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்தனர்.
இந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்படி பிரதேசங்களின் வீதிகள், பாடசாலைக் கட்டடங்கள், ஆஸ் பத்திரிக் கட்டடங்கள், பொதுச் சந்தைக் கட்டடங்கள் என் பன துரிதகதியில் புனரமைக்கப்படவிருக்கின்றன.இது தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளும் பணியில் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று கிளிநொச்சி அரசாங்க அதிபர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply