விடுவிக்கப்பட்ட சிறார்களின் எதிர்கால நலன்கள்

சிறுவர் நலன்கள் மற்றும் அவர்களது பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதொரு காலகட்டத்துக்கு இலங்கை தற்போது வந்துள்ளது. வடக்கு, கிழக்கு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அங்குள்ள சிறார்கள் விடுவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய வேளை யில் இந்த அக்கறை மிகவும் பிரதானமானதாகும்.யுத்த சூழலுக்குள் நீண்ட காலமாக அகப்ப ட்டிருந்த பல்லாயிரம் சிறார்களின் எதிர்கால நலன்கள் தொடர்பாக காத்திரமான திட்டங் களை வகுத்துச் செயற்பட வேண்டிய பாரிய தொரு பொறுப்பை அரசாங்கம் இப்போது ஏற்றிருக்கிறது.

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப் பின் (சார்க்) சிறுவர்கள் தொடர்பான அமைச் சர்கள் மற்றும் சிரேஷ்ட உயரதிகாரிகள் மாநாடு கொழும்பில் நடைபெற்றிருக்கும் இவ்வேளையில் வடக்கு, கிழக்கு சிறுவர்கள் தொடர்பான கரிசனை கூடுதலாக எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

நீண்டகால யுத்தத்தின் விளைவினால் அங்கி ருந்த பல்லாயிரம் சிறார்கள் கல்வியையும் தாய்தந்தையரின் பராமரிப்பையும் இழந்து எதிர்காலமே சூனியமாகிவிட்ட இளைஞர் சமுதாயமாக இன்று உள்ளனர். கல்வியை முற்றாக இழந்துள்ளதனால் தொழில்வாய்ப் பைப் பெற்றுக்கொள்ளத் தகுதியில்லாத துரதிஷ்டமான நிலையில் அவர்கள் இன்று உள்ளனர்.

கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலான காலப் பகுதியில் வடக்கு கிழக்கில் எண்ணி லடங்காத சிறார்களின் கல்வி சீரழிந்து போனதற்கு புலிகளே பொறுப்பாளிகளாவர். புலிகள் தங்களது படையில் சேர்த்துக் கொள்வதற்காக பலவந்தமாகப் பிடித்துச் சென்ற சிறார்களின் எண்ணிக்கை கணக்கி லடங்காதது. அதேசமயம் ஆயுதக் கவர்ச்சியி னால் ஈர்க்கப்பட்டு கல்வியை இடைநடுவில் கைவிட்டுச் சென்ற சிறார்களின் எண்ணிக் கையும் ஏராளம். அறியாப் பருவத்தில் மூளைச்சலவை செய்யப்பட்ட இதுபோன்ற பல்லாயிரக் கணக்கான பிஞ்சுகளில் பெரும் பாலானோர் இன்று உயிருடன் இல்லை யென்பது வேதனையான விடயம்.

இன்று…. வடக்கு, கிழக்குச் சிறார்கள் கோரப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமான சூழலுக்கள் உள்வாங்கப்பட்டி ருக்கிறார்கள். அவர்கள் தங்களது தாய்தந்தை யரின் அரவணைப்பில் நிம்மதியாக வாழவும் சுதந்திரமாகக் கல்வியைத் தொடரவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கு சிறுவர், சிறுமியரின் கல்வி தெடர்பாக மாத்திரமன்றி அவர்களது உளவளம் குறித்தும் விசேட கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

யுத்தத்தின் பிடியிலிருந்து வடக்கு, கிழக்கு சிறார்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன ரென்பது நிம்மதியான விடயமாக இருந்த போதிலும் அச்சிறார்களின் மனவடுக்களைக் குணமாக்குவதற்கு நீண்டகாலம் தேவையென் பது உண்மை.

உடைமை இழப்பு, இடம்பெயர்வு, கல்விப் பாதிப்பு, உறவினர் இழப்பு போன்ற பல்வேறு கொடுமைகளால் பிஞ்சு உள்ளங் களில் ஏற்பட்டுள்ள ரணங்கள் குணமடை வதற்கு சிலகாலம் செல்லக் கூடும். இச்சிறார் களின் கல்வி அபிவிருத்தியில் அரசாங்கம் புதிதாக ஏற்படுத்தியிருக்கும் விசேட திட்டங் களை கல்விச் சமூகம் பாராட்டியிருக்கிறது.

அதேசமயம் கல்விச் செயற்பாடுகளுக்குச் சமாந்தரமாக உளவள ஆற்றுப்படுத்துகை செயற்பாடுகளும் இன்றைய நிலையில் அவசியமாகின்றன. ஒரு சில தொண்டு நிறுவனங்கள் இவ்விடயத்தில் காண்பிக்கின்ற அக்கறையையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

மேற்படி தொண்டு நிறுவனங்கள் கல்வி நிர்வாகத்துடன் ஒன்றிணைந்து மாணவர்க ளின் உளவள ஆற்றுப்படுத்துகை செயற்பாடு களை முன்னெடுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு விடயங்களில் பணி புரிகின்ற தொண்டு நிறுவனங்கள் சிறுவர் நலன் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் இப்போது புரிகிறது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்ப ட்டுள்ள இந்நிலையில், நாட்டை மீளக்கட்டி யெழுப்பும் பணிகளுக்கு நிகராக எதிர்கால இன ஐக்கியத்துக்கான திட்டங்களும் எம் முன்னே பிரதானமாக உள்ளன. இன்றைய சிறார்களின் மனவடுக்களை ஆற்றுவதும் அவர்களது உள்ளங்களில் உண்மையான இன ஐக்கியத்துக்கான வித்துக்களை நடுவதும் நம் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply