விபத்தில் சிக்கிய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தேறி வருகிறார்
ஹவ்லொக் டவுனில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இராணுவத்தின் 57 வது படைப்பிரிவின் முன்னாள் கட்டளைத் தளபதியும், ஜேர்மன் நாட்டுக்கான புதிய இலங் கைத் தூதுவருமான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தற்பொழுது தேறி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹெக்டர் வீரசிங்கம் தெரிவித்தார்.
இந்த வாகன விபத்தில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த டொக்டர், அவரது வலது கால் நேற்றைய தினம் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜகத் டயஸ் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். மேஜர் ஜெனரல் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் சுட்டிக் காட்டினார். ஹவ்லொக் டவுன், பொலிஸ் மைதானத்திற்கு அருகிலுள்ள வீதியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் சென்று கொண்டிருந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் காருடன் வான் ஒன்று மோதியதில் விபத்து சம்பவித்தது. இந்த சம்பவத்தில் காரில் சென்று கொண்டிருந்த மேஜர் ஜெனரலும் வானில் சென்ற மூவரும் காயமடைந்தனர்.
மேஜர் ஜெனரலின் வலது காலில் பலத்த காயம் ஏற் பட்டது. இந்தச் சமயம் அந்த வழியில் வந்து கொண்டிருந்த லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சாரதியான உபுல் குமார என்பவர் உடனடியாக ஜெனர் ஜகத் டயஸை எடுத்துச் சென்று கொழும்பு தேசிய வைத்திய சாலையின் விபத்து பிரிவில் அனுமதித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply