யுத்தகளம் பற்றிப் பேசும் தகுதி இராணுவ உடை தரித்த எனக்கா? உடை தைப்பவனுக்கா உண்டு?

இலங்கை இராணுவத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி வருபவன் நான். ஆகவே இராணுவ உடை தரித்த எனக்கா? அல்லது உடைகளைத் தைக்கும் தையற்காரனுக்காக யுத்தகளம் பற்றிப் பேசும் தகுதியுண்டு? இவ்வாறு கேள்வியெழுப்புகிறார் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர பாதுகாப்புக் கண்காணிப்புப் பிரிவொன்றை ஏற்படுத்தி அதன் மூலம் வடபகுதி யுத்த களம் தொடர்பில் தெரிவித்து வரும் கருத்துகள் குறித்து சரத் பொன்சேகாவிடம் கேட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

லக்பிம பத்திரிகையாளருக்கு வழங்கிய பேட்டியொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த நான்கு தினங்களில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையே வடக்கில் இடம்பெற்ற மோதல்களின் போது 30 படையினரே கொல்லப்பட்டனர்.ஆனால் புலிகள் தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். தமது தரப்பில் கொல்லப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். புலிகள் பதுங்கியிருக்கிறார்கள். நாங்கள் அவர்களை முன்னோக்கிச் செல்கிறோம்.

பூநகரியில் இடம்பெற்ற மோதலில் 600க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாக மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறாரே எனப் பத்திரிகையாளர் கேட்டபோது, யுத்தம் தொடர்பில் தவறான தகவல்களை மக்களுக்கு வழங்கி அவர்களது மன நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர் பொய் கூறுகிறார்.

பூநகரியைக் கைப்பற்றுவதற்று இரு நாட்களுக்கு முன்னர் தொலைக்காடசியொன்றில் தோன்றிய அவர், நாம் நடத்தும் யுத்தம் பொய்யானது,மாயையானது எனக் குறிப்பிட்டார். ஆனால் அவர் கூறி 48 மணி நேரத்துக்குள நாம் பூநகரியைக் கைப்பற்றி விட்டோமே என்றார்.

பிரபாகரன் குறித்து இராணுவத் தளபதி சரத்பொன்சேகா குறிப்பிடுகையில், இப்போது அவர் மனநோயாளி, மனிதாபிமானமற்ற மிருகத்தனமானவர் எனக் குறிப்பிட்டார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply