வடக்கு வசந்தம் திட்டத்திற்கு கூடுதலாக உதவ இந்தியா முன்வருகை
இலங்கையின் வட பகுதியில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் வடக்கின் வசந்தம் திட்டம் தொடர்பாக இந்திய அரசு கூடிய கவனம் செலுத்தி வருவதுடன் விரைவான மீள்குடியேற்றத்திற்காக கண்ணிவெடி மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கும் உதவ முன்வந்துள்ளதாக இந்தியாவிலிலுள்ள இலங்கையின் தூதுவர் ரொமேஷ் ஜயசிங்க தெரிவித்தார்.இந்தியாவின் புதுடில்லி நகரிலுள்ள இலங்கையின் தூதரகத்தில் தூதுவர் ரொமேஷ் ஜயசிங்கவை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து புதுடில்லி வந்த ஊடகவியலாளர்கள் குழுவினர் நேற்று வியாழக் கிழமை தூதுவரை பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் இலங்கை மிகவும் வேகமான அபிவிருத்தியை நோக்கி செல்லவேண்டியுள்ளது. இந்தியா போன்ற ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலங்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது.
பயங்கரவாத ஒழிப்புக்கு இந்தியா எந்தளவுக்கு ஒத்துழைப்புகளை வழங்கியதோ அதனைவிட கூடுதல் உதவிகளை வழங்க முன் வந்துள்ளது. கடந்த இந்திய வரவு- செலவு திட்ட உரையின்போது நிதியமைச்சர் 500 கோடி ரூபாவை இலங்கைக்கு வழங்குவதாகக் கூறியது மிகவும் வரவேற்கத்தக்கது. மிகவும் முக்கியமானதாகும்.
பயங்கரவாத ஒழிப்புக்கு இரு நாட்டுத் தலைவர்களினதும் கருத்துப் பரிமாறல்களும், நட்புறவுகளுமே மிகவும் சக்தியாக அமைந்தது என்றும் தெரிவித்தார்.உதவி இலங்கைத் தூதுவர் பாலித்த கனேகொட, தூதரகத்தின் முதற் செயலாளர் சுகீஸ்வர குணரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கை பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்கள் ஆறுபேர் வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சின் அனுசரணையுடன் கடந்த செவ்வாய்க்கிழமை புதுடில்லி வந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply