எகிப்துக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பினார்
எகிப்துக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்றுக்காலை நாடு திரும்பினார்.அணிசேரா நாடுகளின் 15வது உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்காக எகிப்து சென்றிருந்த ஜனாதிபதிக்கு, பல உயர்மட்ட அரச தலைவர்களைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், லிபியத் தலைவர் கேர்ணல் முஹம்மர் கடாபி, சர்பிய ஜனாதிபதி பொரிஸ் ரெடிக், கியூப ஜனாதிபதி ஜெனரல் ராவுல் காஸ்ட்ரோ, நேபாள பிரதமர் மாதவ் குமார் நேபாள், இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் ஆகியோரை ஜனாதிபதி சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் நற்பெறுபேறுகள் விரைவில் இலங்கைக்குக் கிடைக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அணிசேரா மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றிய உரையை அரச தலைவர்கள் பாராட்டியுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply