திருமலை-யாழ். கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

திருகோணமலைக்கும் யாழ்குடாநாட்டுக்கும் இடையிலான பயணிகள் கப்பல்சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசபடைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்த நிலையில் A-9 வீதி மூடப்பட்டது. இந்த நிலையில் கடல்வழிப்பாதை மூலமே குடாநாட்டுக்கான பயணம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கப்பல் சேவை அநேகமாக மீண்டும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படலாம் என உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 27ஆம் திகதி விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக கப்பல்சேவை இடைநிறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply